» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வடலிவிளையில் ரூ.133.39 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்: துணை முதல்வர் துவக்கி வைத்தார்
புதன் 11, ஜூன் 2025 3:43:14 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடலிவிளையில் ரூ.133.39 கோடியில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடலிவிளையில் ரூ.133.39 கோடியில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (11.06.2025) பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்த்த்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, குத்துவிளக்கேற்றினார்.
விழாவில் அவர் பேசுகையில் - கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்கு பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தும் பொருட்டு திட்ட மதிப்பீடு ரு.76.05 கோடிக்கு திட்டம் செயல்படுத்தவும், பராமரிப்புக்கென ஆண்டு ஒன்றுக்கு ரு.1.90 கோடி எனவும் மதிப்பிடப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப அனுமதி தலைமை பொறியாளர் (த.கு,வ,வாரியம்) அவர்களால் ரூ.8.35 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான பணி ஆணை ஒப்பந்தகாரருக்கு வழங்கப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கழிவுநீர் அகற்றல் கோட்டம், நாகர்கோவில் மூலம் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு ரூ.133.39 கோடி திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி 52 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. தற்போது முதல் கட்டமாக 35 வார்டுகளில் (18 வார்டுகளுக்கு முழுமையாகவும் 17 வார்டுகளுக்கு பகுதியாகவும்) பாதாளச்சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1,81,399 மக்கள் பயன்பெறுகிறார்கள்.
இத்திட்டத்தின்படி பகுதி – I மற்றும் பகுதி – II களில் 115659 மீ நீளத்திற்கு கழிவு நீர் குழாய்கள் மற்றும் 5028 எண்ணிக்கை இயந்திர குழிகள் மற்றும் 2 மேற்செலுத்தும் இயந்திர குழிகள் அமைக்கப்பட்டு கழிவு நீரேற்று நிலையத்தில் சேகரிக்கப்படுகிறது. பாறைக்கால்மடத்தில் உள்ள கழிவு நீரேற்று நிலையத்தில் இருந்து 750 மி.மீ. விட்டமுடைய இரும்பு குழாய்கள் மூலம் 2160 மீ நீளத்திற்கு வலம்புரிவிளையில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவு நீர் எடுத்து செல்லப்படுகிறது. இக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் 17.66 எம்.எல்.டி. கொள்ளளவு சுத்திகரிக்கும் அளவிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 15310 வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர், சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 5,450 மீ. தொலைவில் உள்ள தெங்கம்புதுர் கால்வாய் பாசனத்திட்டத்திற்கு உபயோகப்படுத்தப்படும் பொருட்டு தெங்கம்புதூர் கால்வாயில் விடபடுகிறது. நீண்ட நாட்களாக நடைபெற்ற இத்திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டுவந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பேசினார்கள்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் என்.சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக செயற்பொறியாளர் பொறி.ராஜன், உதவி செயற்பொறியாளர்கள் கங்காதரன் (கூ.பொ), ராஜேஷ் குமார், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் செல்வகுமார், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் பொறி.ரகுராமன், மாநகராட்சி உறுப்பினர்கள் அனிலா சுகுமார், ஜெய விக்ரமன், ஸ்டாலின் பிரகாஷ், ரமேஷ், பால் அகியா, ரோசிட்டா திருமால், மாநகராட்சி இளநிலை பொறியாளர் தேவிகண்ணன், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
