» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் புதிய சிறப்பு நூலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
செவ்வாய் 10, ஜூன் 2025 12:26:41 PM (IST)

வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் புதிய சிறப்பு நூலகத்தினை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடம் மற்றும் கோட்டார் அரசு ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிறப்பு நூலகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து இன்று (10.06.2025) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் வடசேரி சிறப்பு நூலகத்தில் குத்துவிளக்கேற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில் - தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ மாணவியர்களின் பொது அறிவினை வளர்க்கவும், போட்டித்தேர்வுகளுக்கும், உயர்கல்வி படிப்பிற்கும் தேவையான அனைத்து குறிப்புகளை எடுத்து படிப்பதற்கு ஏற்றவாறு தமிழ்நாட்டிற்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்குட்பட்ட பள்ளிகளிலும் நூலகங்கள் அமைக்க வேண்டுமென ஆணையிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்குட்பட்ட முக்கிய பகுதிகளில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டு மாணவர்கள் போட்டித்தேர்வர்கள் பயன்பெற்று வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு நூலகங்கள் அமைக்கும் திட்டத்தினை அறிவித்தார்கள்.
அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களில் 110 கூடுதல் நூலக கட்டிடங்களையும், 70 சிறப்பு நூலகங்களையும் சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்திற்கு வெளி நாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கும்போது தங்களது நேரத்தை பயனுள்ளதாக அமைத்திடும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் வடசேரி பேருந்து நிலையத்தில் சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கோட்டார் அரசு ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிலும் மாணவ மாணவியர்களும், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் தங்கள் நேரத்தை பயனுள்ளதாக களிக்கும் வகையில் மருத்துவ கல்லூரி வளாகத்தில் சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்ததற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் சார்பிலும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட நூலக அலுவலர் மேரி, கோட்டார் அரசு ஆயுர்வேதா மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கிளாரன்ஸ் டேவி, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவஹர், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் ரெகு ராம், மாநகராட்சி உறுப்பினர்கள் கலா ராணி, மோனிகா விமல், உதவி நூலக அலுவலர் நசீர், ஆனந்த், நூலக அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
