» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கொச்சியில் கப்பல் கவிழ்ந்த சம்பவம்: சின்னவிளை கடற்கரையில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
திங்கள் 9, ஜூன் 2025 12:02:46 PM (IST)

கொச்சி கடலில் கப்பல் கவிழ்ந்த சம்பவம் எதிரொலியாக சின்னவிளை கடற்கரை பகுதியினை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், மீன்வளத்துறையின் சார்பில் சின்னவிளை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில் "கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் கடந்த மே 25-ம் தேதி எம்எஸ்சி எல்சா 3 என்ற கப்பலில் கொண்டு செல்லப்பட்ட கண்டெய்னர்கள் அரபிக்கடலில் இயந்திர கோளாறு காரணமாக மூழ்கியது.
இந்த கப்பலில் சில பொருட்கள் குறிப்பாக பிளாஸ்டிக்துகள்கள் அடங்கிய மூட்டைகள், மரக்கட்டைகள், முந்திரி பருப்பு மூட்டைகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடலோர பகுதிகளில் கரை ஒதுக்கியதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுதலின்படி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறந்த வல்லுனர்களை கொண்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, கைப்பற்றப்பட்ட பொருட்களை கடற்கரை பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு கண்டெய்னரில் இருந்து கைப்பற்றப்பட்ட தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுநாள்வரை கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடலில் நச்சுப்பொருட்கள் கலக்கப்படவில்லை என்பதை வல்லுனர்கள் உறுதி செய்துள்ளார்கள். தற்போது மீன்வளத்துறை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மைத்துறை ஆப்த மித்ரா தன்னார்வலர்கள், தூய்மை காவலர்கள் வாயிலாக சின்னவிளை கடற்கரை மணலில் கலந்துள்ள பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருப்பதோடு, கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவ கிராம மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வுகள் மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக வழங்கப்பட்டுவருகிறது.
மேலும், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் துகள்களை சேமித்து வைப்பதற்காக முட்டம் தனியார் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அறையினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆகவே இதுகுறித்து அனைவரும் அச்சப்பட தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். ஆய்வில் உதவி இயக்குநர் (மீன்வளம்) விர்ஜில் பிராஸ், மீன்வளத்துறை அலுவலர்கள், மாசு கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
