» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!
வெள்ளி 6, ஜூன் 2025 8:53:22 AM (IST)

கேரளாவில் இருந்து குமரிக்கு மீன் கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வழியாக இறைச்சி, மீன் கழிவுகளை ஏற்றியபடி வாகனங்கள் செல்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த பிரச்சினை நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்தநிலையில் நேற்று கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சக்தி குளங்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் கழிவுகள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் குழித்துறை பகுதியில் வைத்து சிறைபிடித்தனர். பின்னர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீசார் விரைந்து வந்து அந்த கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் டிரைவர், கிளீனரை பிடித்து விசாரித்தனர். அதே சமயத்தில், தூத்துக்குடி பகுதிக்கு கொண்டு செல்லும் மீன்கள் இருப்பதாக டிரைவர் கூறியுள்ளார். அது உண்மையா? என அதற்குரிய ஆவணத்தை கேட்டுள்ளனர். இதனை டிரைவர் முறையாக ஒப்படைக்கவில்லையென்றால், மீன்கழிவுகளை கேரளாவுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
