» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மாணவர்கள் இருவரை காப்பாற்றி உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிதியுதவி!
வியாழன் 5, ஜூன் 2025 11:50:04 AM (IST)

குழித்துறை தடுப்பணையில் தவறி விழுந்த இரண்டு மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்து இறந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 இலட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் இன்று (05.06.2025) இரண்டு மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்து இறந்தவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ரூ.10 இலட்சத்திற்கான நிதியுதவி வழங்கி, தெரிவிக்கையில் - கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை நகராட்சிக்குட்பட்ட தபால் நிலையம் அருகில் வசித்து வந்தவர் பீட்டர் ஜான்சன் என்பவர் தினமும் குழித்துறை தடுப்பணையில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கடந்த 01.06.2025 அன்று சுமார் காலை 11.30 மணியளவில் மேற்படி பகுதியில் குளிக்கச் சென்றபோது தடுப்பணையில் வெட்டுமணி பகுதியிலிருந்து குழித்துறை, மதிலகம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோ (வயது 17) மற்றும் சிறுவன் அகிலேஸ் (வயது 12) ஆகிய இருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும்போது தவறி தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் விழுந்ததைக் கண்ட பீட்டர் ஜான்சன் இரண்டு மாணவர்களின் உயிரையும் காப்பாற்றிய நிலையில் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனடிப்படையில் இச்சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு மாணவர்களையும் காப்பாற்றிய பீட்டர் ஜான்சன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டி, நமது மாவட்ட ஆட்சியர் அனுப்பிய பேரரணை அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் நிதியுதவியினை தாயுள்ளத்துடன் அறிவித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து இன்றைய அன்னாரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 இலட்சத்துக்கான காசோலையினை வழங்கியுள்ளோம். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
நிகழ்வில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் தாரகை கத்பர்ட், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, இ.ஆ.ப, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஷேக் அப்துல்காதர், விளவங்கோடு வட்டாட்சியர் லெயோலா பாய், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
