» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் பெண் போலீசிடம் அத்துமீறல்; 2 வாலிபர்கள் அதிரடி கைது
புதன் 6, டிசம்பர் 2023 8:23:13 AM (IST)
நாகர்கோவிலில் பெண் போலீசிடம் அத்துமீறிய 2 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி நேற்றுமுன்தினம் ஏராளமான போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் புதுக்கடை காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் செட்டிகுளம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது செட்டிகுளம் கணபதி நகரை சேர்ந்த பிரதீஷ் (வயது 30), திங்கள்நகரை சேர்ந்த பிராங்கிளின் (29) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அந்த சமயத்தில் பெண் போலீஸ் இருவரையும் தடுத்து நிறுத்தியதோடு திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இந்த வழியாக செல்லக்கூடாது என கூறியுள்ளார். இதனால் பெண் போலீசிடம் வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இருவரும், பெண் போலீசிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் போலீஸ் கோட்டார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பிரதீஷ், பிராங்கிளின் ஆகிய 2 பேர் மீது போலீசிடம் அத்துமீறுதல், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
சனி 10, மே 2025 12:06:40 PM (IST)

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்: மாணவர்களுக்கு அழைப்பு!
சனி 10, மே 2025 10:57:29 AM (IST)

நாகர்கோவில் - ஷாலிமார் ரயிலை தாம்பரம் வரை நீட்டித்து ஒரே எண்ணில் இயக்க கோரிக்கை
சனி 10, மே 2025 10:44:08 AM (IST)

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 9, மே 2025 4:00:54 PM (IST)
