» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரதமர் மோடிக்கு டிரம்ப் அரசு முழு ஆதரவு: வெளியுறவுத்துறை அதிகாரி அறிவிப்பு

சனி 3, மே 2025 10:42:58 AM (IST)



தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் பிரதமர் மோடிக்கு டிரம்ப் அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டம்மி ப்ரூஸ் கூறியுள்ளார். 

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்த மீறல்கள் அதிகரித்துள்ளன. 

இவ்விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டம்மி ப்ரூஸ் அளித்த பேட்டியில், ‘பிரதமர் மோடி அரசுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசின் முழு ஆதரவும் உள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட பதற்றத்தால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளது. நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் ஆகியோருடன் பேசினார். கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியிடம் தெரிவித்தபடி, ‘தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது.

பிரதமர் மோடிக்கு எங்களின் முழு ஆதரவு உள்ளது. இரு நாடுகளும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும். அதனால் தெற்காசியாவில் அமைதியை பேண முடியும்’ என்றார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டம்மி ப்ரூஸ், பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில், பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் அளித்து வரும் ஆதரவை உறுதிப்படுத்தினார். இந்த ஆதரவு, தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory