» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்றம் ஜன.28ஆம் தேதி கூடுகிறது: பிப்.1-ல் பட்ஜெட் தாக்கல்!

வெள்ளி 9, ஜனவரி 2026 5:26:52 PM (IST)

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/budgetnirmala_1767959793.jpgகடந்த 2017-ம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. ஆண்டு இந்த பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

இதனால் 2026– 27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் அன்றைய தினம் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கும் என்றும், மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் இறுதி செய்யப்பட்ட தற்காலிக அட்டவணையை மேற்கோள் காட்டி, நாடாளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந்தேதி ஜனாதிபதி திரவு பதி முர்மு உரையுடன் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த நாள் 29-ந்தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகள் விடுமுறை நாட்களாகும். பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகிறது.

ஜனாதிபதி உரை மற்றும் மத்திய பட்ஜெட் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பிறகு, பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 13-ம் தேதி பிறகு ஒரு மாத கால விடுமுறைக்கு ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து நாடாளுமன்றம் மார்ச் 9 அன்று மீண்டும் கூடி ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory