» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இது இந்தியா, வடகொரியா அல்ல: பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு ராகுல் காந்தி பதிலடி!
வியாழன் 26, பிப்ரவரி 2026 4:45:11 PM (IST)
டெல்லி ஏஐ (AI) உச்சி மாநாட்டில் ஆடையைக் கழற்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்துள்ள ராகுல் காந்தி, "இந்தியா ஒன்றும் வடகொரியா அல்ல" எனப் பிரதமரைச் சாடியுள்ளார்.
கடந்த 20-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டின் 5-வது அரங்கில், இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் திடீரென நுழைந்தனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்திருந்தனர். அந்த ஆடைகளில் 'இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்' மற்றும் 'எப்ஸ்டீன் பைல்' (Epstein Files) தொடர்பான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.திடீரென அந்த டி-ஷர்ட்களைக் கழற்றிய அவர்கள், பிரதமர் மோடிக்கு எதிராகவும், வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணா ஹரி, குந்தன் யாதவ், அஜய் குமார், நரசிம்ம யாதவ் மற்றும் ஜிதேந்திர யாதவ் ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்களை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிரதமர் மோடியின் கடும் கண்டனம்
சர்வதேசப் பிரதிநிதிகள் முன்னிலையில் அரங்கேறிய இந்தப் போராட்டத்தைப் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் பேசியதாவது:
"சர்வதேச நிகழ்வை கண்ணியமற்ற அரசியலை அரங்கேற்றும் மேடையாக காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது. வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆடையைக் கழற்றி நின்றிருக்கிறார்கள். நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நாட்டு மக்களுக்குத் தெரியும். அப்படியிருக்கும்போது எதற்காக ஆடையைக் கழற்ற வேண்டும்? இதை நான் காங்கிரஸ் தலைவர்களிடமே கேட்க விரும்புகிறேன்."
ராகுல் காந்தியின் பதிலடி
பிரதமரின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இது இந்தியா, வடகொரியா இல்லை.""உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தனது எதிர்ப்பைத் தேசத் துரோகமாகக் குற்றம் சாட்டும் திசையை நோக்கி மெதுவாகத் தள்ளப்பட்டு வருகிறது."
"கேள்வி கேட்பதே சதியாகக் கருதப்படும் ஒரு மோசமான நிலை தற்போது உருவாகி வருகிறது." சர்வதேச மாநாட்டில் நடந்த இந்தப் போராட்டமும், அதற்குப் பின்னான அரசியல் மோதல்களும் தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்டோ டெபிட் வரம்பு ரூ.15 ஆயிரமாக உயர்வு : இனி ஓடிபி தேவையில்லை - ஆர்பிஐ அறிவிப்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 5:51:36 PM (IST)

திருச்சூர் வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு : விசாரணை ஆணையம் அமைத்தது கேரள அரசு!
புதன் 22, ஏப்ரல் 2026 5:25:16 PM (IST)

பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது: பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் பிரதமர் அஞ்சலி
புதன் 22, ஏப்ரல் 2026 12:50:25 PM (IST)

டெல்லியில் போலி ஈனோ, நெஸ்கஃபே தயாரித்த கும்பல் கைது: 1.5 லட்சம் பாக்கெட்டுகள் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:15:54 PM (IST)

தேங்கி நிற்கும் பயங்கரவாத வழக்குகள்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் நடவடிக்கை
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:33:31 PM (IST)

ராஜஸ்தான் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து : பிரதமரின் திறப்பு விழா ஒத்தி வைப்பு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:27:48 AM (IST)

