» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உறுதி : இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு!

புதன் 7, ஜனவரி 2026 5:21:12 PM (IST)



பயங்கரவாதத்திற்கு எதிராக சிறந்த உறுதியுடன் போராடுவது குறித்து இஸ்ரேல் பிரதமருடன் ஆலோசனை மேற்கொண்டோம் என பிரதமர் மோடி கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி இன்று பேசினார். இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், என்னுடைய நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியதில் மகிழ்ச்சி. அவருக்கும் மற்றும் இஸ்ரேல் மக்களுக்கும் ஆங்கில புதுவருட வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன்.

வரும் ஆண்டில், இந்தியா-இஸ்ரேல் நட்புறவை இன்னும் வலுப்படுத்துவது தொடர்பாக நாங்கள் இருவரும் ஆலோசனை மேற்கொண்டோம். பிராந்திய சூழல் பற்றிய பார்வைகளை இருவரும் பரிமாறி கொண்டோம் என்றும் தெரிவித்து உள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக சிறந்த உறுதியுடன் போராடுவது என்ற பகிரப்பட்ட தீர்மானத்தை இருவரும் மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டோம் என தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory