» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு அமல்: ரயில்வேக்கு ரூ.600 கோடி வருவாய் அதிகரிப்பு

வெள்ளி 26, டிசம்பர் 2025 10:25:18 AM (IST)

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ஒரு காசு வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மூலம் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பணவீக்கம் மற்றும் ரயில்வே பராமரிப்புச் செலவுகளைக் கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்களில் 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.அதாவது, குளிர்சாதன மற்றும் குளிர்சாதன வசதி அல்லாத முன்பதிவு பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 காசுகள் வீதமும், முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ஒரு காசு வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

தேஜஸ், சதாப்தி, ராஜ்தானி, வந்தே பாரத், அந்தியோதியா, வந்தே மெட்ரோ, அம்ரித் பாரத் உள்ளிட்ட ரயில்களிலும் கட்டணம் உயருகிறது.நேற்று வரையில் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. இன்று (26-ந்தேதி) முதல் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் புதிய கட்டணம் பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு மூலம் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு, அன்றாட செலவுகள் என பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வரும் பொதுமக்களுக்கு இந்த கட்டண உயர்வு கூடுதல் சுமையாகவே பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory