» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவின் முதல் 'மெல்லிசை சாலை' மும்பையில் திறப்பு: வாகன ஓட்டிகள் உற்சாகம்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 10:56:57 AM (IST)

இந்தியாவில் முதன் முறையாக மும்பை கடற்கரைச் சாலையில் மெல்லிசை சாலை' அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பான், ஹங்கேரிக்கு அடுத்தபடியாக இந்தத் தொழில்நுட்பம் இப்போது இந்தியாவிற்கு வந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை நரிமன் பாயிண்டிலிருந்து ஒர்லி நோக்கிச் செல்லும் கடற்கரைச் சாலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக 'மெல்லிசை சாலை' (Musical Road) அமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இத்தகைய தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்ட 5-வது சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இசைச் சாலையை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், "கடற்கரைச் சாலையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இசைச் சாலை வாகன ஓட்டிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியான அனுபவத்தைத் தரும். ஹங்கேரிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, வரும் காலங்களில் மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்," என்று தெரிவித்தார்.
மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தச் சாலையின் சிறப்பம்சங்கள் விளக்கப்பட்டுள்ளன: ஒர்லி சுரங்கப்பாதையிலிருந்து வெளியேறி நரிமன் பாயிண்ட் நோக்கிச் செல்லும் சாலையில் 500 மீட்டர் தூரத்திற்கு இந்த இசை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
சாலையின் மேற்பரப்பில் குறிப்பிட்ட இடைவெளியில் 'ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ்' (Rumble Strips) அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் இந்தப் பட்டைகளின் மீது ஓடும்போது, டயர்களுக்கும் சாலைக்கும் இடையே ஏற்படும் உராய்வின் மூலம் இசை உருவாகிறது.
வாகனங்கள் மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் செல்லும்போது, ஏ.ஆர். ரஹ்மானின் புகழ்பெற்ற 'ஜெய் ஹோ' பாடல் வாகனத்திற்குள் தெளிவாகக் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் வரிசையில் இந்தியா
ஏற்கனவே ஹங்கேரி, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இத்தகைய இசைச் சாலைகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது இந்தியாவிலும் இந்தச் சோதனை முயற்சி வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே தேசபக்தி உணர்வையும், மகிழ்ச்சியையும் தூண்டுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் பா.ஜனதா ஆட்சியின் நுழைவுவாயில் பாலக்காடு - பிரதமர் மோடி பிரசாரம்!
திங்கள் 30, மார்ச் 2026 9:34:25 AM (IST)

மில்க்ஷேக்கில் விஷம் கலந்து தந்தையை கொன்ற பெண் காவலர்: 3 ஆண்டுகளுக்குப் பின் அம்பலம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:41:26 AM (IST)

மேற்காசிய நெருக்கடியை முழு பலத்துடன் இந்தியா எதிர்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை
சனி 28, மார்ச் 2026 4:10:10 PM (IST)

ஏப்ரல் 1 முதல் வங்கி விதிமுறைகளில் அதிரடி மாற்றம்: ஏ.டி.எம் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு!
சனி 28, மார்ச் 2026 12:18:19 PM (IST)

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கா? சமூக வலைதள வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்!
வெள்ளி 27, மார்ச் 2026 11:49:11 AM (IST)

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடி குறைப்பு: மத்திய அரசு நடவடிக்கை
வெள்ளி 27, மார்ச் 2026 10:49:35 AM (IST)

