» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளாவில் பா.ஜனதா ஆட்சியின் நுழைவுவாயில் பாலக்காடு - பிரதமர் மோடி பிரசாரம்!
திங்கள் 30, மார்ச் 2026 9:34:25 AM (IST)

கேரள மாநில சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாலக்காட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு கோட்டை மைதானத்திற்கு வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி செண்டை மேளம் அடித்து மகிழ்ந்தார். பின்னர், பாலக்காடு தொகுதி வேட்பாளர் ஷோபா சுரேந்திரனை ஆதரித்துப் பேசினார்.
பிரதமரின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்: கேரளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு நுழைவுவாயிலாகப் பாலக்காடு விளங்குகிறது. இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் பா.ஜனதா மீது வைத்துள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.
மாநில அரசு ₹5 லட்சம் கோடிக்கு மேல் கடனில் உள்ளது. மக்களின் பணம் எங்கே போனது? அது இடது முன்னணித் தலைவர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் இடது மற்றும் ஜனநாயக முன்னணிகளின் ஊழல்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்படும்."
கடந்த 22 ஆண்டுகள் இடது முன்னணியும், 50 ஆண்டுகள் காங்கிரஸும் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், எந்த வளர்ச்சியும் இல்லை. பா.ஜனதா ஆட்சி அமைந்தால் 'வளர்ந்த கேரளம்' உருவாவது உறுதி. இது மோடியின் உத்தரவாதம்."
காங்கிரஸும் மார்க்சிஸ்ட் கட்சியும் ஒருவரை ஒருவர் பா.ஜனதாவின் 'பி-டீம்' (B-Team) என்று கூறிக்கொள்கிறார்கள். இதிலிருந்தே பா.ஜனதா தான் உண்மையான 'ஏ-டீம்' என்பது தெளிவாகிறது."
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஒருவர் பெண்கள் தொடர்பான புகாரில் நீக்கப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் பா.ஜனதா ஆட்சியில் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என உறுதி அளித்தார். முன்னதாகப் புகழ்பெற்ற கல்பத்தி கோவிலைக் குறிப்பிட்டுத் தனது உரையைத் தொடங்கிய பிரதமர், கேரளம் விரைவில் வளர்ச்சியின் பாதையில் செல்லும் எனத் தெரிவித்து உரையை முடித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓடும் காரில் திடீர் தீ; சிசுவுடன் இளம்பெண் பலியான கொடூரம் - போலீஸ் விசாரணை!
ஞாயிறு 17, மே 2026 11:49:21 AM (IST)

மருத்துவ உலகில் பெரு வியப்பு: 5 நாட்கள் போராடி 4 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்!
சனி 16, மே 2026 5:24:58 PM (IST)

பிரதமரின் வேண்டுகோளை மீறி வாகன ஊர்வலம்: பாஜக பிரமுகர் மீது ம.பி முதல்வர் நடவடிக்கை
சனி 16, மே 2026 12:44:51 PM (IST)

போர் பதற்றங்களுக்கு இடையிலும் உயர்ந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி: ரிசர்வ் வங்கி அறிக்கை
சனி 16, மே 2026 12:21:02 PM (IST)

மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாடல்!
சனி 16, மே 2026 8:32:00 AM (IST)

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு!
வெள்ளி 15, மே 2026 12:44:50 PM (IST)


