» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகத்தில் தனியார் பேருந்து-கன்டெய்னர் லாரி மோதி கோர விபத்து: 17 பேர் உயிரிழப்பு!

வியாழன் 25, டிசம்பர் 2025 11:14:59 AM (IST)



கர்நாடகத்தில் தனியார் சொகுசு பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 17 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். 

கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் படுக்கை வசதி கொண்டு தனியார் சொகுசு பேருந்து ஒன்று, 32 பயணிகளுடன் கோகர்ணாவுக்கு சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் அதிவேகத்தில் வந்த லாரி கன்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி தாண்டி வந்து பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில். லாரி மோதிய வேகத்தில் பயணிகள் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 17 பேர் பேருந்திற்குள்ளேயே உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் லாரி ஓட்டுநரும் அடங்குவார். படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நிகழந்த இந்த கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி இரங்கல் 

கர்நாடகா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory