» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு : டிசம்பர் 26ஆம் தேதி முதல் அமல்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:33:37 AM (IST)
நாடு முழுவதும் டிசம்பர் 26ஆம் தேதி ரயில் பயணங்களுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரயில் கட்டணம் டிசம்பர் 26ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண வகுப்புகளில் 215 கிமீ தூரத்திற்கு மேல் ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. 500 கிமீ வரையிலான ரயில்களில் ரூ.10 கட்டணம் உயர்த்தப்படுகிறது. மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கிமீக்கு ரூ.2 பைசா உயர்த்தப்படுகிறது.
இந்த ரயில் கட்டண உயர்வு மூலமாக ரூ.600 கோடி கூடுதல் வருவாய் ரயில்வே துறைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 215 கிமீ தூரத்திற்கும் குறைவான பயணங்களுக்கு கட்டண உயர்வு இல்லை. அதேபோல் புறநகர் ரயில்களுக்கு எந்த கட்டண உயர்வும் இல்லை. இது நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்கள் மத்தியில் என்ன வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஏற்கனவே ஜூலை மாதத்தில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்த சூழலில், தற்போது ஒரே ஆண்டில் 2வது முறையாக ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கட்டண உயர்வு காரணமாக சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு செல்லும் ரயில்களின் பயணக் கட்டணம் ரூ.10 அதிகரிக்கும். சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில்களின் கட்டணம் ரூ.15 அதிகரிக்கும்.
தற்போது சென்னை டூ மதுரைக்கு முன்பதிவு செய்யாமல் பயணிப்போருக்கான டிக்கெட் விலை ரூ.170 ஆக உள்ளது. அதேபோல் ஸ்லீப்பர் பயண கட்டமாக ரூ.400 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் டிசம்பர் 26ஆம் தேதிக்கு பின் சென்னை டூ மதுரை பயணக் கட்டமாக ரூ.410 பெறப்படும். அதேபோல் 3ஆம் வகுப்பு ஏசி பயணக் கட்டணமாக ரூ.845 வசூலிக்கப்படுகிறது. இதற்கான புக்கிங் செலவுகள் போக, ரூ.900 வரை கட்டணமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
அதேபோல் சென்னை டூ கோவையை பொறுத்தவரை ஸ்லீப்பர் பயணத்திற்கு ரூ.295 முதல் ரூ.355 வரை கட்டணமாக உள்ளது. புக்கிங் செலவுடன் சேர்த்து ரூ.10 உயரலாம். அதேபோல் 3ஆம் வகுப்பு ஏசி பயணத்திற்கான கட்டணமாக ரூ. 760 முதல் ரூ.930 வரை கட்டணமாக பெறப்பட்டு வருகிறது. ரயில்களுக்கு ஏற்ப இந்த டிக்கெட் விலையில் மாற்றம் இருக்கும். இதனால் புக்கிங் கட்டணத்துடன் சேர்த்து ரூ.10 உயரும் என்று தெரியவந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி : பிரதமர் மோடி பெருமிதம்
திங்கள் 22, டிசம்பர் 2025 12:35:30 PM (IST)

அணுசக்தித் துறையில் தனியார்: மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:17:30 AM (IST)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)


.gif)