» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடுகள்; குஜராத்துக்கு ரூ.6.65 கோடி அபராதம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
புதன் 26, நவம்பர் 2025 12:43:21 PM (IST)
ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடுகள் தொடர்பாக குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு ரூ.6.65 கோடி அபராதம்விதித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் இணைப்புகளை வழங்கும் நோக்கத்துடன், மத்திய அரசு கடந்த 2019ல் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் ஆரம்ப செலவு ரூ.3.60 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் அதற்கான செலவு ஏற்கனவே ரூ.4.33 லட்சம் கோடியை தாண்டிவிட்டது.
செயல்படுத்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகார்களால் நாடு முழுவதிலுமிருந்து வந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை எடுத்து மாநிலங்களுக்கு ரூ.129.27 கோடியை அபராதம் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
அதிகபட்சமாக குஜராத் மாநிலத்திற்கு ரூ.6.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரிபுரா (ரூ.1.22 கோடி), அசாம் (ரூ.5.08 லட்சம்), மகாராஷ்டிரா (ரூ.2.02 கோடி), கர்நாடகா (ரூ.1.01 கோடி) மற்றும் ராஜஸ்தான் (ரூ.5.34 கோடி) உள்ளிட்ட மாநிலங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மும்பை குறித்து சர்ச்சை பேச்சு: அண்ணாமலைக்கு உத்தவ் சிவசேனா கண்டனம்!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:36:55 PM (IST)

ஜனநாயகன் பட விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு!
சனி 10, ஜனவரி 2026 4:06:56 PM (IST)

பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் விவகாரம்: பினராயி விஜயனுக்கு சித்தராமையா கடிதம்!
சனி 10, ஜனவரி 2026 11:47:16 AM (IST)

நாடாளுமன்றம் ஜன.28ஆம் தேதி கூடுகிறது: பிப்.1-ல் பட்ஜெட் தாக்கல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 5:26:52 PM (IST)

சிவசேனா கட்சியை பிரதமர் மோடி உடைத்தார் : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
வெள்ளி 9, ஜனவரி 2026 4:59:21 PM (IST)

ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை: மம்தா பானர்ஜி கடும் கண்டனம்
வியாழன் 8, ஜனவரி 2026 4:38:10 PM (IST)

