» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாலிவுட் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார் : திரைத்துறையினர் அஞ்சலி!

திங்கள் 24, நவம்பர் 2025 3:49:17 PM (IST)



பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா  உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89...

ஹிந்தியில் பாலிவுட் திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சையில் இருந்தார்.

இதற்கிடையே, அண்மையில் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக அவரது மனைவியும் எம்பியுமான ஹேமமாலினி, அவரது மகள் நடிகை ஈஷா தியோல் உள்ளிட்டோர் உறுதிப்படுத்தியதுடன் தர்மேந்திராவை வீட்டிற்கும் அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று உடல் நலக்குறைவால் காலமானார். 

நடிகர் தர்மேந்திரா மறைவுக்கு முக்கிய பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வரும் வேளையில் நடிகர்கள் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் தர்மேந்திரா உடல் வைக்கப்பட்டுள்ள தகன இடத்திற்கு நேரில் சென்றுள்ளனர். 89 வயதான தர்மேந்திரா திரைத்துறையில் பல்வேறு சாதனைகளைச் செய்ததுடன் பல உயரிய விருதுகளையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory