» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திரைக் கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்
புதன் 24, செப்டம்பர் 2025 11:49:01 AM (IST)

டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற 71-வது தேசிய விருது வழங்கும் விழாவில் திரைக் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
டெல்லி விக்யான் பவனில் 71-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், தேசிய விருது அறிவிக்கப்பட்ட திரைக் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான், விக்ராந்த் மாஸே இருவரும் பெற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், ஷாருக்கான் முதல்முறையாக தேசிய விருது பெறுவது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகை விருதை ராணி முகர்ஜி பெற்றார்.
சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ்.பாஸ்கர், திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை, ‘பார்க்கிங்’ தயாரிப்பாளர் கே.எஸ்.சினிஷ் ‘வாத்தி’ படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் பெற்றனர்.
இதேபோல, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைக் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து,`தாதா சாகேப் பால்கே' விருது மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. விருது பெற்றபின் பேசிய அவர், "இந்த தருணம் எனக்கு மட்டுமே சொந்தமானதல்ல.மலையாள திரைப்படக் குடும்பத்துக்கே சொந்தமானது.
இந்த விருதை, எங்கள் துறையின் பாரம்பரியம், படைப்பாற்றலுக்கான கூட்டு மரியாதையாகப் பார்க்கிறேன். மலையாள சினிமாவை கலைநோக்கோடும், கற்பனையோடும் உருவாக்கியவர்களின் சார்பாக இவ்விருதை ஏற்கிறேன். என் கனவுகளிலும் கூட இந்த தருணத்தைக் கற்பனை செய்ததில்லை. அதனால் இது ஒரு கனவு நனவானதல்ல. அதைவிட மிகப் பெரியது. மலையாளத் திரைத் துறைக்கும், கேரள பார்வையாளர்களுக்கும் இவ்விருதை நான் அர்ப் பணிக்கிறேன். சினிமா என் ஆன்மாவின் இதயத் துடிப்பு. மத்திய அரசுக்கு நன்றி” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவினருக்கு ஆயுதங்கள் அளிப்பதை ஆளுநர் நிறுத்த வேண்டும்: திரிணமூல் எம்பி சர்ச்சை பேச்சு..!
திங்கள் 17, நவம்பர் 2025 11:13:22 AM (IST)

சபரிமலை கோவில் நடை மண்டல பூஜைக்காக திறப்பு : தினமும் 90 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!
திங்கள் 17, நவம்பர் 2025 8:50:45 AM (IST)

அதானி ஒப்பந்தத்தில் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் மத்திய அமைச்சர் பாஜகவில் இருந்து நீக்கம்!
சனி 15, நவம்பர் 2025 5:34:20 PM (IST)

பீகாரில் பிரசாந்த் கிஷோர் கட்சி படுதோல்வி: 236 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பு
சனி 15, நவம்பர் 2025 12:19:55 PM (IST)

ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது : காங்கிரஸ் அறிக்கை!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:52:00 PM (IST)

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு!
வெள்ளி 14, நவம்பர் 2025 11:08:06 AM (IST)


.gif)