» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழ்நாட்டிற்கு வரவிருந்த தொழிற்சாலை குஜராத்திற்கு மாற்றம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 12:32:51 PM (IST)

தமிழ்நாட்டிற்காக திட்டமிடப்பட்ட தொழிற்சாலை குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக  காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மோடி அரசு நாட்டில் 4 செமி கண்டக்டர் உற்பத்தித் திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளது. விரிவான செயல் திட்டத்திற்குப் பிறகு ஒரு முன்னணி தனியார் நிறுவனம் தெலுங்கானாவில் ஒரு திட்டத்திற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தது. 

இது ஆந்திராவிற்கு இடம்பெயர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அங்கீகரிக்கப்பட்டது. வெகு காலத்திற்கு முன்பே இதேபோன்ற இடமாற்றம் கட்டாயப்படுத்தப்பட்டது. 2 செமி கண்டக்டர் உற்பத்தித் திட்டங்கள் அவற்றின் முன்மொழியப்பட்ட இடத்தை தெலுங்கானாவிலிருந்து குஜராத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

இதேபோல், தமிழ்நாட்டிற்காக திட்டமிடப்பட்ட மற்றொரு தொழிற்சாலை குஜராத்திற்கு மாற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஒப்புதல் பெற்றது. இன்னும் ஏதாவது சொல்ல வேண்டுமா? மாநிலங்களுக்கு இடையிலான போட்டி இந்தியாவை வலிமையாக்கும் என பிரதமர் பேசுகிறார். ஆனால் நடுவர் மிகவும் வெளிப்படையாக ஒருதலைப்பட்சமாக இருந்தால், போட்டி ஒரு கேலிக்கூத்தாக மாறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

பச்சைக்கொடி கண்டக்டர்Aug 17, 2025 - 10:21:12 AM | Posted IP 172.7*****

எந்த தொழிற்சாலையையும் தமிழ்நாட்டில் வர விட மாட்டீர்கள், வரலேன்னா குறை சொல்லுவீங்க . உங்க பொழப்பே இதுதான். STERLITE ஆலையை ஏன் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி விட்டீர்கள், இப்போது STERLITE குஜராத் சென்று விட்டது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory