» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிரதமர் மோடியுடன் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:40:03 PM (IST)

கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார் கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த். இந்தாண்டு மே மாதம் கனடா வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அனிதா ஆனந்த் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தருகிறார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடி வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்தை வரவேற்றார். அவரது வருகை இருதரப்பு கூட்டாண்மைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். புதிய முயற்சிகளுக்குப் பங்களிக்கும் என்று வேர் கூறினார்.
ஜி-7 மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றபோது அந்நாட்டுப் பிரதமர் மார்க் கார்னியை சந்தித்ததை மோடி நினைவுகூர்ந்தார். வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் குறிப்பிட்டார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழர்களின் பொங்கல் பண்டிகை உலகளாவிய விழாவாக மாறிவிட்டது: பிரதமர் மோடி பேச்சு
புதன் 14, ஜனவரி 2026 12:04:17 PM (IST)
ஜனநாயகன் திரைப்படத்தை தடுக்க நினைப்பதா? மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:20:12 PM (IST)

ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம்: பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!
செவ்வாய் 13, ஜனவரி 2026 11:30:35 AM (IST)

இந்தியாவைவிட முக்கியமான நட்பு நாடு வேறு எதுவும் இல்லை: அமெரிக்க தூதர் செர்கியோ கோர்
செவ்வாய் 13, ஜனவரி 2026 10:49:45 AM (IST)

அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை: தேவேந்திர பட்னாவிஸ்
செவ்வாய் 13, ஜனவரி 2026 10:45:15 AM (IST)

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி
திங்கள் 12, ஜனவரி 2026 5:54:25 PM (IST)

