» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜனநாயகன் திரைப்படத்தை தடுக்க நினைப்பதா? மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:20:12 PM (IST)

ஜனநாயகன்’ திரைப்படத்தை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடுக்க நினைப்பது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்.” என்று காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை பிரச்சினையால் வெளியாகவில்லை. இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தற்போது ‘ஜனநாயகன்’ படத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடுக்க நினைப்பது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். தமிழக மக்களின் குரலை அடக்கி, நீங்கள் எப்போதும் வெல்ல முடியாது மோடி அவர்களே!” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்தச் சூழலில், விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தியின் குரல் பதிவாகியுள்ளது. கரூர் துயரச் சம்பவம் நடந்தபோதும் கூட விஜய்யிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசினார் என்பது நினைவுகூரத்தக்கது. ஆனால் அந்தப் பேச்சு தொடர்பான விவரங்கள் ஏதும் கசியவில்லை. இந்தநிலையில் இன்று இந்தப் பதிவை ராகுல் பகிர்ந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழர்களின் பொங்கல் பண்டிகை உலகளாவிய விழாவாக மாறிவிட்டது: பிரதமர் மோடி பேச்சு
புதன் 14, ஜனவரி 2026 12:04:17 PM (IST)

ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம்: பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!
செவ்வாய் 13, ஜனவரி 2026 11:30:35 AM (IST)

இந்தியாவைவிட முக்கியமான நட்பு நாடு வேறு எதுவும் இல்லை: அமெரிக்க தூதர் செர்கியோ கோர்
செவ்வாய் 13, ஜனவரி 2026 10:49:45 AM (IST)

அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை: தேவேந்திர பட்னாவிஸ்
செவ்வாய் 13, ஜனவரி 2026 10:45:15 AM (IST)

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி
திங்கள் 12, ஜனவரி 2026 5:54:25 PM (IST)

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் : டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜர்
திங்கள் 12, ஜனவரி 2026 12:52:01 PM (IST)