» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வருவாய் குறைந்ததால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி விருப்பம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:43:41 PM (IST)
நிறைய சம்பாதிக்க வேண்டும். பலருக்கு உதவ வேண்டும் என்பதால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன் என்று சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று நடைபெற்ற பாஜக விழாவில் சதானந்தன் மாஸ்டர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தொண்டர்களிடம் பேசியதாவது: நான் ஒருபோதும் அமைச்சராக ஆசைப்பட்டதில்லை. அமைச்சரான பிறகு எனது சினிமா வருமானம் கணிசமான அளவில் குறைந்துள்ளது. எனவே நான் நிறைய சம்பாதிக்க வேண்டும். பலருக்கு உதவ வேண்டும். எனவே நான் அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளேன்.அமைச்சர் பதவியில் இருந்து என்னை நீக்கிய பிறகு சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக்க வேண்டும் என்று நான் இங்கே மனதாரக் கூறுகிறேன். இது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழர்களின் பொங்கல் பண்டிகை உலகளாவிய விழாவாக மாறிவிட்டது: பிரதமர் மோடி பேச்சு
புதன் 14, ஜனவரி 2026 12:04:17 PM (IST)
ஜனநாயகன் திரைப்படத்தை தடுக்க நினைப்பதா? மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:20:12 PM (IST)

ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம்: பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!
செவ்வாய் 13, ஜனவரி 2026 11:30:35 AM (IST)

இந்தியாவைவிட முக்கியமான நட்பு நாடு வேறு எதுவும் இல்லை: அமெரிக்க தூதர் செர்கியோ கோர்
செவ்வாய் 13, ஜனவரி 2026 10:49:45 AM (IST)

அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை: தேவேந்திர பட்னாவிஸ்
செவ்வாய் 13, ஜனவரி 2026 10:45:15 AM (IST)

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி
திங்கள் 12, ஜனவரி 2026 5:54:25 PM (IST)

