» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற கேள்வி
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:38:15 PM (IST)
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது. சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தமிழக அரசின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடித்து இருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசு சார்பிலும், 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்தும், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை விசாரணை கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா? சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா? சந்தேகம் இருந்தாலே அரசு அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுத்து செல்வீர்களா?
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்று சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா? என்று கேள்வி எழுப்பியது.
டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் குற்றம் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் நடந்த ஊழல் குறித்து மாநில போலீஸ் விசாரிக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரிப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது. டாஸ்மாக் நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன்களை வலுக்கட்டாயமாக அமலாக்கத்துறையினர் பறித்துள்ளனர்.
ஊழியர்களின் செல்போன் தரவுகளை அனுமதியின்றி பதிவிறக்கம் செய்தது தனிநபர் உரிமையை பறிக்கும் செயல். அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுப்படுவதில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேருந்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ பரவல் - உயிரை மாய்த்த நபர்!
திங்கள் 19, ஜனவரி 2026 3:30:50 PM (IST)

கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின்னரும் தொடர்ந்து பிரசாரம் செய்தது ஏன்? விஜய்யிடம் சிபிஐ கேள்வி
திங்கள் 19, ஜனவரி 2026 12:54:46 PM (IST)

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழக நிர்வாகிகளுக்கு ராகுல் அறிவுறுத்தல்
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:36:39 AM (IST)

நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
சனி 17, ஜனவரி 2026 5:00:23 PM (IST)

தமிழக வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர்., ஆற்றிய பங்கு சிறப்பானது : பிரதமர் மோடி புகழாரம்!
சனி 17, ஜனவரி 2026 11:18:17 AM (IST)

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி: மும்பை, புனே, நாக்பூர் மாநகராட்சிகள் பாஜக வசம்!
சனி 17, ஜனவரி 2026 10:13:06 AM (IST)


அதுOct 14, 2025 - 08:45:41 PM | Posted IP 172.7*****