» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழக வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர்., ஆற்றிய பங்கு சிறப்பானது : பிரதமர் மோடி புகழாரம்!

சனி 17, ஜனவரி 2026 11:18:17 AM (IST)

எம்.ஜி.ஆரின் வாழ்க்கையும், முழு அரசியல் பயணமும் ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/modimgr_1768628877.jpgதமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள செய்தியில், தனித்துவம் வாய்ந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். 

தமிழக வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு சிறப்பானது. தமிழ் கலாசாரத்தை பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. நம்முடைய சமூகத்திற்கான அவருடைய தொலைநோக்கு பார்வையை உண்மையாக்க நாம் எப்போதும் பாடுபடுவோம் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, அவர் வெளியிட்ட வீடியோவில், திரைப்பட திரையில் இருந்து அரசியல் மேடை வரை மக்கள் இதயங்களில் ஆட்சி செய்தார். அவருடைய வாழ்க்கை, அவருடைய முழு அரசியல் பயணமும் ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஏழைகளுக்கு மரியாதைக்குரிய வாழ்க்கையை உறுதி செய்வதற்காக அவர் அயராது உழைத்தார்.

பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் லட்சியங்களை நிறைவேற்ற இன்று நாம் அனைவரும் பாடுபடுகிறோம். அவர் தரமான கல்வி மற்றும் சுகாதார பராமரிப்புக்காக பாடுபட்டார் என தெரிவித்து உள்ளார். அதனால்தான் சமூகத்தின் இளைஞர்களும் பெண்களும் அவரை மிகவும் மதித்தனர். அதனால்தான் இன்றும் கூட சமூகத்தின் ஏழை பிரிவினர் அவரை தங்கள் மிகச்சிறந்த தலைவர் என அழைக்கிறார்கள். பாரத ரத்னா எம்.ஜி.ஆருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்றும் தெரிவித்து உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory