» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி உள்பட வட மாநிலங்களில் கனமழை வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 11:46:02 AM (IST)

தலைநகர் டெல்லி உள்பட வட இந்திய மாநிலங்களில் கனமழை வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழையால் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் முக்கிய சாலைகளில் கூட முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். டெல்லியில் இன்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மற்றும் குருகிராமில் கனமழையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வரும் 17 ஆம் தேதி வட இந்திய மாநிலங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் வட மாவட்டங்களான பெய்ரேலி, லகிம்பூர், பிலிபட், ஷஜன்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory