» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காகம், நாயைத் தொடர்ந்து பூனைக்கும் இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்: போலீசில் புகார்
புதன் 13, ஆகஸ்ட் 2025 8:02:38 AM (IST)
காகம், நாயை தொடர்ந்து தற்போது பூனைக்கும் இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்கு வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றது. இதில் பல போலி தகவல்கள் இடம் பெற்று இருந்தது கண்டறியப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் ஆன்லைனில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், டிராக்டர் மற்றும் நாய் பெயரில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் விலங்குகள் பெயரில் ஆன்லைனில் இருப்பிட சான்றிதழுக்கு விண்ணப்பித்த விவகாரம் வெளியானது.
பாட்னாவில் பாபு என்ற பெயரில் ஒரு நாய் புகைப்படத்துடன் இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர், அந்த சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. இதற்கு விண்ணப்பித்தவர், சான்றிதழ் வழங்கிய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சமஸ்திபூர் மாவட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெயரில் இருப்பிட சான்றிதழ் கோரி ஒருவர் விண்ணப்பம் செய்து இருந்தார். மண்டல அலுவலர் இந்த விண்ணப்பத்தை நிராகரித்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல் டிராக்டர், காகம் பெயரில் இருப்பிட சான்றிதழ் கேட்ட விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் பூனையின் பெயரில் ஒருவர் இருப்பிட சான்றிதழுக்கு விண்ணப்பித்து உள்ளார். பீகாரில் 5-வது சம்பவம் இதுவாகும். ரோஹ்தாஸ் மாவட்டத்தின் நஸ்ரிகஞ்ச் தொகுதியில் ஒருவர் ‘கேட் குமார்' என்ற பூனைக்கு இருப்பிட சான்றிதழுக்கு விண்ணப்பித்தார்.
விண்ணப்பதாரரின் புகைப்படத்துக்கான இடத்தில் ஒரு பழுப்பு நிற கண்கள் கொண்ட பூனை படம் இடம் பெற்று இருந்தது. மேலும் விண்ணப்பதாரரின் பெற்றோருக்கு ‘கேட்டி பாஸ்' மற்றும் ‘கேட்டி தேவி' என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29-ந்தேதியிட்ட விண்ணப்பத்தை பார்த்த கலெக்டர் உதிதா சிங்கின் அறிவுறுத்தலின் பேரில் நஸ்ரிகஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தவுடன் நிராகரிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "இது போன்ற அற்பத்தனம், அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறாக உள்ளது. மேலும் நிர்வாகத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது, இது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதற்கு சமம்” என தெரிவித்தார்.
ஆன்லைன் இணையதளத்தில் தொடர்ந்து போலியான தகவல்கள், டிஜிட்டல் ஆவணங்களின் நம்பகத்தன்மை இல்லாமை என அடையாளம் தெரியாத மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருவதால் இதனை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெருநாய்களை காப்பகத்துக்கு அனுப்ப தடை : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:25:38 AM (IST)

ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 5:39:23 PM (IST)

பொய் வழக்குகள்: வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:56:38 AM (IST)

டெல்லி முதல்-அமைச்சர் மீது தாக்குதல்: கைதான வாலிபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:45:20 AM (IST)

முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல் : கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 4:19:17 PM (IST)

துணை ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் முன்னிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 3:37:11 PM (IST)
