» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெருநாய்கள் விவகாரத்தில் மனிதாபிமான வழி தேவை: பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!
செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 5:09:40 PM (IST)
தெருநாய்களை அகற்றும் விவகாரத்தில் மனிதாபிமான வழியைக் கண்டறிய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "டெல்லி நகரத்தின் அனைத்து தெருநாய்களையும் ஒரு சில வாரங்களுக்குள் காப்பகங்களுக்கு மாற்றுவது அவற்றை கொடூரமாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதற்கு வழிவகுக்கும். அவற்றை வைத்திருக்க போதுமான காப்பகங்கள்கூட இங்கு இல்லை.
நகர்ப்புறச் சூழலில் உள்ள விலங்குகள் மோசமான சிகிச்சை மற்றும் மிருகத்தனத்திற்கு ஆளாகின்றன. நிச்சயமாக இந்த சூழ்நிலையை நிர்வகிக்க ஒரு சிறந்த வழி இருக்கலாம்.இந்த அப்பாவி விலங்குகளைப் பாதுகாப்பாக கவனிக்க ஒரு சிறந்த மனிதாபிமான வழியைக் கண்டறிய வேண்டும். நாய்கள் மிகவும் அழகான, மென்மையான உயிரினங்கள். அவைகள் இப்படியான கொடுமைக்கு ஆளாகக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்த முடிவா? மத்திய அரசு விளக்கம் - ராகுல் விமர்சனம்!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:37:12 PM (IST)

டெல்லியில் பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன் 15, அக்டோபர் 2025 5:05:42 PM (IST)

அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்புவோம்: பிரதமர் மோடி
புதன் 15, அக்டோபர் 2025 11:05:01 AM (IST)

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற கேள்வி
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:38:15 PM (IST)

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை எதிரொலி: டிஜிபிக்கு கட்டாய விடுப்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:17:00 PM (IST)

பிரதமர் மோடியுடன் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:40:03 PM (IST)

ஆனந்த்Aug 13, 2025 - 08:54:55 AM | Posted IP 172.7*****