» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி; ராகுல் காந்தி உட்பட கூட்டணி எம்.பிக்கள் கைது!

திங்கள் 11, ஆகஸ்ட் 2025 5:26:07 PM (IST)



வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட கூட்டணி எம்.பி.க்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். 

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ள மகர் துவாரிலிருந்து நிர்வாச்சன் சதனில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குப் பேரணியாக சென்றனர். இப்பேரணியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். 

அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து செல்லும்போது, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர். போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளதால், இண்டியா கூட்டணி மூத்த தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் மற்றும் என்சிபி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தை தொடர்கின்றனர். 

இன்று நடந்த பேரணியின் போது திரிணமூல் எம்.பி மிதாலி பாக் மயக்கமடைந்தார். பேரணியின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், "தேர்தல் ஆணையத்திடம் எங்கள் கோரிக்கையை மிகவும் தெளிவாக முன்வைக்கிறோம். நாங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அமைதியான பேரணியை நடத்தி வருகிறோம். 

பிஹார் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் ஒரு குறிப்பாணையை வழங்க விரும்புகிறோம். இப்போது தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு செல்வதற்கு கூட எங்களுக்கு அனுமதி இல்லை. நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்னால், ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது” என்று கூறினார்.


மக்கள் கருத்து

srinivasanAug 14, 2025 - 08:40:44 AM | Posted IP 162.1*****

india alliances cheeting country people.but a true and originalindian never vote these parties

srinivasanAug 14, 2025 - 08:39:03 AM | Posted IP 172.7*****

ivan oru lusu.indian people never belive his words.because he is not a indian.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory