» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் : அடுத்த கல்வியாண்டில் அமல்!

திங்கள் 11, ஆகஸ்ட் 2025 11:33:46 AM (IST)

புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் சிபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளது. இது அடுத்த கல்வியாண்டில் அமலாகிறது. 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCFSE) 2023 மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஆகியவற்றுடன் இணைந்து, மனப்பாடம் செய்வதிலிருந்து திறன் அடிப்படையிலான கற்றலுக்கு கவனத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் CBSE தேர்வில் இந்த நடைமுறையை சேர்த்துள்ளனர். இதே திட்டம் 2014ல் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு 2017ல் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory