» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா - ரஷ்யா உறவு வலுவானது: டிரம்ப் எச்சரிக்கை குறித்து இந்தியா கருத்து!

சனி 2, ஆகஸ்ட் 2025 12:32:14 PM (IST)

இந்தியா - ரஷ்யா உறவு மூன்றாம் நாட்டின் தலையிட்டால் பாதிக்கப்படாது என்று மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியபோது, ‘‘இந்தியா - ரஷ்யா உறவு வலுவானது. மூன்றாம் நாட்டின் தலையிட்டால் இந்த உறவு பாதிக்கப்படாது. இதேபோல இந்தியா - அமெரிக்கா உறவும் வலுவடைந்து வருகிறது. நாட்டின் நலனுக்கு தேவையான பாதுகாப்பு கொள்கையை கடைபிடித்து வருகிறோம்’’ என்றார்.

அமெரிக்கர்களின் வீட்டு செலவு அதிகரிக்கும் இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு நடவடிக்கையால் ஏற்படும் பணவீக்கம் காரணமாக அமெரிக்காவில் சராசரி குடும்பத்தினரின் வீட்டு செலவு ஆண்டுக்கு 2,400 டாலர்வரை அதிகரிக்கும். அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று எஸ்பிஐ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் மின்னணு பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், நுகர்வோர் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயரும் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory