» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ம்தேதி தொடங்குகிறது: தர்மேந்திர பிரதான் தகவல்
வியாழன் 6, நவம்பர் 2025 3:58:42 PM (IST)
காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ம்தேதி தொடங்குகிறது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கம் என்பது தமிழகத்திற்கும் வாரணாசிக்கும் இடையிலான கலாச்சாரப் பிணைப்பை வலுப்படுத்தும் இந்திய அரசின் ஒரு முயற்சியாகும். இது பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் உத்தரபிரதேச அரசுடன் இணைந்து இந்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. 2022 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டியில், "தமிழ்நாடு - காசி கலாச்சார தொடர்பை வலுப்படுத்த கொண்டாடப்படும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ம்தேதி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 1400 பேர் காசிக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள், எழுத்தாளர், தொழில் வல்லுனர்கள், கைவினைஞர்கள், ஆன்மீக அறிஞர்கள் உள்ளிட்டோரை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என கூறினார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி : பிரதமர் மோடி பெருமிதம்
திங்கள் 22, டிசம்பர் 2025 12:35:30 PM (IST)

நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு : டிசம்பர் 26ஆம் தேதி முதல் அமல்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:33:37 AM (IST)

அணுசக்தித் துறையில் தனியார்: மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:17:30 AM (IST)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)


.gif)