» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கான பாதிப்புகள்: ஜெய்ராம் ரமேஷ் பட்டியல்!
சனி 7, பிப்ரவரி 2026 4:59:53 PM (IST)
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பட்டியலிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘இந்திய - அமெரிக்க கூட்டறிக்கை, விவரங்கள் குறித்து மவுனம் சாதிக்கிறது. எனினும், வெளியிடப்பட்ட தகவல்களிலிருந்து பின்வரும் விஷயங்கள் தெளிவாகின்றன:1. இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யாது. இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால், 25% அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
2. இந்திய விவசாயிகளின் நலனைப் பலிகொடுத்து, அமெரிக்க விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்தியா இறக்குமதி வரிகளைக் குறைக்கும்.
3. அமெரிக்காவிலிருந்து இந்தியா செய்யும் வருடாந்திர இறக்குமதிகள் மூன்று மடங்காக உயர்ந்து, நமது நீண்டகால வர்த்தக உபரியை இல்லாமல் ஆக்கிவிடும்.
4. அமெரிக்காவுக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற சேவைகளின் ஏற்றுமதி விஷயத்தில் நிச்சயமற்ற நிலை தொடரும்.
5. அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு முன்பை விட அதிக வரிகள் விதிக்கப்படும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் நெருக்கம் காட்டுவதற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை. மோடியின் அமெரிக்கப் பயணத்தைவிட, ட்ரம்ப்பின் இந்திய பயணம் வெற்றி பெற்றுவிட்டது. நண்பன் (ரஷ்யா) இனி நண்பன் இல்லை’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:22:04 PM (IST)

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா புதிய உயரம் தொடும் : சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:02:22 PM (IST)

கரூர் சம்பவத்தில் அரசு வேலை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:41:00 PM (IST)

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடக்கம்: ரூ.175 கோடி வரிப்பணம் வீண்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:50:45 AM (IST)

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)


