» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பணமதிப்பிழப்பு 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அறிவிப்பு வந்ததா? மத்திய அரசு மறுப்பு
சனி 8, நவம்பர் 2025 8:49:34 AM (IST)
பணமதிப்பு இழப்பு செய்யப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழித்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு செல்லும் நிதியுதவியை தடுத்தல், முறையான மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு, மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தது.
இதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு, புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்காக பொதுமக்கள் சந்தித்த துயரங்கள் ஏராளம். மணிகணக்கில் ஏ.டி.எம்.எந்திரங்களின் முன்பும், வங்கிகளின் முன்பும் நீண்ட வரிசையில் காத்து நின்ற சோகச்சுவடு நடைபெற்று இன்றுடன் (சனிக்கிழமை) 9 ஆண்டுகள் ஆகிறது.
பணமதிப்பு இழப்பு செய்யப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை இன்னும் சிலர் கைவசம் வைத்திருப்பதாக அவ்வப்போது செய்திகள் வருவதை பார்க்கமுடிகிறது. வீடுகளில் எப்போதோ சேமிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்ட பணம், காலாவதியான பிறகு கத்தை, கத்தையாக கண்டுபிடிக்கப்படுகிறது. இதை மாற்றி தங்களுடைய அவசர தேவைக்காக பயன்படுத்தமுடியாமல் திணறி வருகின்றனர். ஒரு சிலர் அவற்றை காட்சி பொருளாக வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். மாற்ற முடியாமல் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்களுக்கு இது ஆறுதல் கொடுத்தது. இதையடுத்து இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த தகவல் தவறானது. ரிசர்வ் வங்கி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றம் செய்வது தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. நிதி ஒழுங்குமுறைகள் மற்றும் பணம் தொடர்பான அறிவிப்புகளுக்கு ரிசர்வ் வங்கியின் இணையதளம் மட்டுமே அதிகாரப்பூர்வமானது” என்று கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளர்ச்சிப் பாதையில் இந்தியா : வந்தே பாரத் ரயில்களை துவக்கி பிரதமர் மோடி பேச்சு!
சனி 8, நவம்பர் 2025 12:29:52 PM (IST)
தேர்தலை திருடி பிரதமரானவர் மோடி என்பதை எடுத்துரைப்போம் : ராகுல் காந்தி
வெள்ளி 7, நவம்பர் 2025 4:49:36 PM (IST)

தெருநாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 7, நவம்பர் 2025 12:52:24 PM (IST)

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 11:56:11 AM (IST)

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ம்தேதி தொடங்குகிறது: தர்மேந்திர பிரதான் தகவல்
வியாழன் 6, நவம்பர் 2025 3:58:42 PM (IST)

எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயில்: 8-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:33:53 AM (IST)


.gif)