» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உ.பி.யில் நீண்ட காலம் முதல்வர் பதவி வகித்தவர் பட்டியலில் ஆதித்யநாத் முதலிடம்
செவ்வாய் 29, ஜூலை 2025 12:51:37 PM (IST)
உத்தர பிரதேசத்தில் தொடர்ச்சியாக நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்தவர்கள் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, அக்கட்சியின் யோகி ஆதித்யநாத் முதல்வரானார். இதையடுத்து கடந்த 2022-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலிலும் 2-வது முறையாக வெற்றி பெற்ற கட்சி என்ற பெருமை பாஜகவுக்கு கிடைத்தது. இதுபோல, யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக முதல்வரானார்.இந்நிலையில், யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்று நேற்றுடன் 8 ஆண்டுகள் மற்றும் 130 நாட்களை நிறைவு செய்தார். இதன் மூலம் அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்தவர்கள் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார்.
இதற்கு முன்பு இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் கோவிந்த் வல்லப் பந்த். உத்தர பிரதேசத்தின் (சுதந்திரத்துக்கு பிறகு) முதல் முதலமைச்சரான அவர், 8 ஆண்டுகள் 127 நாட்கள் தொடர்ந்து முதல்வராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்மநாபசாமி கோவிலில் 107 கிராம் தங்கம் மாயம் : 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை...!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:24:57 AM (IST)

வளர்ச்சிப் பாதையில் இந்தியா : வந்தே பாரத் ரயில்களை துவக்கி பிரதமர் மோடி பேச்சு!
சனி 8, நவம்பர் 2025 12:29:52 PM (IST)

பணமதிப்பிழப்பு 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அறிவிப்பு வந்ததா? மத்திய அரசு மறுப்பு
சனி 8, நவம்பர் 2025 8:49:34 AM (IST)
தேர்தலை திருடி பிரதமரானவர் மோடி என்பதை எடுத்துரைப்போம் : ராகுல் காந்தி
வெள்ளி 7, நவம்பர் 2025 4:49:36 PM (IST)

தெருநாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 7, நவம்பர் 2025 12:52:24 PM (IST)

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 11:56:11 AM (IST)


.gif)