» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நகைக்கடை சுவரில் துளையிட்டு 18 கிலோ தங்கம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
செவ்வாய் 22, ஜூலை 2025 8:55:10 AM (IST)

தெலுங்கானாவில் நகைக்கடை சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்து, 18 கிலோ தங்கநகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை என்ற இடத்தில் சாய் சந்தோஷ் என்ற பெயரில் தங்க நகைக்கடை இயங்கி வருகிறது. இரவு விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்தபோது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது நகைக்கடையின் பின்புற சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளை போடப்பட்டு இருந்தது. மேலும் அங்கிருந்த ஷட்டர் கதவும் கியாஸ் வெல்டிங் மூலமாக உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள், தங்கநகை இருக்கும் இடத்துக்கு சென்று பார்த்தனர்.
அப்போது அங்கிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.17 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதவிர ரூ.22 லட்சமும் கொள்ளை போனது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் கொள்ளை நடந்த கடையை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மா நேரில் பார்வையிட்டார். இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுக்கள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராவின் இணைப்பை துண்டித்த பின்னர், தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.இருப்பினும் அந்தப்பகுதியில் உள்ள மற்ற கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாக திருடர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறையினர் தொடர் பாலியல் வன்கொடுமை: கையில் எழுதி வைத்து மருத்துவர் தற்கொலை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:07:52 PM (IST)

பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்ய வாரிசுகளுக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 24, அக்டோபர் 2025 3:50:43 PM (IST)

ஆந்திராவில் பஸ் தீவிபத்தில் 20பேர் உயிரிழப்பு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!
வெள்ளி 24, அக்டோபர் 2025 11:39:54 AM (IST)

பீகார் சட்ட சபை தேர்தல்: இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:24:12 PM (IST)

திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி!
வியாழன் 23, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

கொலை, ஆயுதக் கடத்தல் வழக்குகளில் தேடப்பட்ட 4 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!
வியாழன் 23, அக்டோபர் 2025 12:42:12 PM (IST)


.gif)