» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி!

வியாழன் 23, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி மும்பை பக்தர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். 

திருப்பதி மாவட்டம் சந்திரகிரி பழையப்பேட்டையைச் சேர்ந்த அசோக் என்ற அசோக்ரெட்டி என்பவர், செல்போன் மூலமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கான வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வாங்கி தருவதாக கூறி மும்பையைச் சேர்ந்த பக்தர்களிடம் ரூ.4 லட்சத்து 1,750-ஐ பண மோசடி செய்துள்ளார். 

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், திருமலை 2-டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, இடைத்தரகரான அசோக் ரெட்டியை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory