» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள்: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 24, ஜனவரி 2026 5:43:32 PM (IST)
வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
18வது ரோஜ்கர் மேளா தில்லியின் இன்று நடைபெற்றது. அந்த திட்டத்தின் கீழ் 61 ஆயிரம் பணி நியமனக் கடிதங்களை அளிக்கும் திட்டத்தை காணொலி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்து பேசியதாவது, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், இந்தியா பல நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் இடம்பெயர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றது.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. தனது அரசு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையைச் செயலாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சிதான் இந்த ரோஜ்கர் மேளா.
மேளா தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட ரோஜ்கார் மேளாக்கள் மூலம் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. 18வது ரோஜ்கர் மேளா நாடு முழுவதும் 45 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதாகப் பணியமர்த்தப்பட்ட வேட்பாளர்கள், அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் சேர்ந்தனர்.
புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்கள் உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை, உயர் கல்வித் துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றுவார்கள் என்றார்.
18வது ரோஜ்கர் மேளா தில்லியின் இன்று நடைபெற்றது. அந்த திட்டத்தின் கீழ் 61 ஆயிரம் பணி நியமனக் கடிதங்களை அளிக்கும் திட்டத்தை காணொலி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்து பேசியதாவது, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், இந்தியா பல நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் இடம்பெயர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றது.உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. தனது அரசு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையைச் செயலாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சிதான் இந்த ரோஜ்கர் மேளா.
மேளா தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட ரோஜ்கார் மேளாக்கள் மூலம் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. 18வது ரோஜ்கர் மேளா நாடு முழுவதும் 45 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதாகப் பணியமர்த்தப்பட்ட வேட்பாளர்கள், அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் சேர்ந்தனர்.
புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்கள் உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை, உயர் கல்வித் துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றுவார்கள் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிலிண்டர் விலை விலை உயர்வுக்கு கண்டனம் : கேரளாவில் மே 6-ம் தேதி ஓட்டல்கள் மூடல்!
சனி 2, மே 2026 4:55:39 PM (IST)

வாக்கு எண்ணிக்கை எதிரொலி: கொல்கத்தாவில் நாளை முதல் 60 நாட்களுக்கு 144 தடை அமல்!
சனி 2, மே 2026 4:02:16 PM (IST)

புனேயில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 65 வயது முதியவர் கைது!
சனி 2, மே 2026 3:36:16 PM (IST)

செல்போனில் எச்சரிக்கை ஒலி கேட்டால் அச்சப்பட வேண்டாம் - மத்திய அரசு அறிவுறுத்தல்!
சனி 2, மே 2026 12:26:10 PM (IST)

ஐதராபாத் அருகே கோர விபத்து: லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
சனி 2, மே 2026 11:02:35 AM (IST)

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் கருவைக் கலைக்க காலக்கெடு தேவையில்லை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:46:58 PM (IST)