» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஐதராபாத் அருகே கோர விபத்து: லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
சனி 2, மே 2026 11:02:35 AM (IST)

ஐதராபாத் புறநகர் பகுதியில், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் (40), தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி ஸ்வேதா மற்றும் மகன்கள் கிருஷ்ண சந்திரா (13), மாதவ் (10). தொடர் விடுமுறையையொட்டி, இவர்கள் ஹைதராபாத் சனத் நகரில் வசிக்கும் ஸ்வேதாவின் சகோதரர் சிவகுமார் (37) வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
சிவகுமார், அவரது மனைவி ராஜேஸ்வரி (35) மற்றும் மகள் ரிஷிதா (7) ஆகியோருடன் இணைந்து இரண்டு குடும்பத்தினரும் ஒரே காரில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டனர். யாதகிரிகுட்டா மற்றும் ஸ்வர்ணகிரி ஆகிய கோவில்களில் தரிசனத்தை முடித்துவிட்டு, நேற்று சிலுகுரு ஏழுமலையான் கோவிலுக்குச் செல்வதற்காகக் காரில் புறப்பட்டனர்.
ஐதராபாத் புறநகர் பகுதியான தோண்டுப்பள்ளி சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகச் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கி சிவகுமார், ராஜேஸ்வரி, ரிஷிதா, ஸ்ரீனிவாஸ் மற்றும் அவரது மகன்கள் கிருஷ்ண சந்திரா, மாதவ் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த ஷம்ஷாபாத் காவல்துறையினர், இடிபாடுகளை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்வேதா மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு, தற்போது தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி குறித்த இழிவான ஏஐ சித்தரிப்பு : மெட்டா தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 12:45:47 PM (IST)

கேரளாவில் கனமழை தீவிரம்: நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி; ஆரஞ்சு அலெர்ட்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:18:23 AM (IST)

மணமக்கள் முதல் பாதிரியார் வரை அனைவரும் இரட்டையர்கள்: கேரளாவில் அபூர்வ திருமணம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:37:07 AM (IST)

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தம்பதிக்கு விவாகரத்து: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:55:59 PM (IST)

முன்னாள் பேருந்து ஓட்டுநர் வீட்டில் ரூ.29 கோடி, 15 கிலோ தங்கம் பறிமுதல்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!
வெள்ளி 31, ஜூலை 2026 5:52:38 PM (IST)

கர்நாடகாவில் பதற்றமான சூழல்: முதல்வர் விஜய் வர வேண்டாம் - டி.கே. சிவக்குமார் கோரிக்கை!
வெள்ளி 31, ஜூலை 2026 3:30:35 PM (IST)


