» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சிலிண்டர் விலை விலை உயர்வுக்கு கண்டனம் : கேரளாவில் மே 6-ம் தேதி ஓட்டல்கள் மூடல்!
சனி 2, மே 2026 4:55:39 PM (IST)
வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே அடியாக உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, வரும் மே 6-ம் தேதி கேரளா மாநிலம் முழுவதும் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களை மூடப்போவதாக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் வணிக சிலிண்டர் விலை சுமார் 993 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டரின் விலை 3,000 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு உணவகத் தொழிலைப் பெருமளவில் முடக்கும் என அஞ்சப்படுகிறது.
இது தொடர்பாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ராஜூ அப்சரா கூறியிருப்பதாவது: ஏற்கனவே பல்வேறு விலைவாசி உயர்வால் இத்துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், சிலிண்டர் விலையேற்றம் 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போல அமைந்துள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே பல நிறுவனங்கள் தட்டுத்தடுமாறி இயங்கி வருகின்றன. தற்போதைய விலை உயர்வு உணவகங்களை நிரந்தரமாக மூடும் நிலைக்குத் தள்ளிவிடும். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மே 6-ம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும்.
எரிவாயு விலை உயர்வால் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இது சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கும் என்றும் வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி குறித்த இழிவான ஏஐ சித்தரிப்பு : மெட்டா தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 12:45:47 PM (IST)

கேரளாவில் கனமழை தீவிரம்: நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி; ஆரஞ்சு அலெர்ட்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:18:23 AM (IST)

மணமக்கள் முதல் பாதிரியார் வரை அனைவரும் இரட்டையர்கள்: கேரளாவில் அபூர்வ திருமணம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:37:07 AM (IST)

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தம்பதிக்கு விவாகரத்து: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:55:59 PM (IST)

முன்னாள் பேருந்து ஓட்டுநர் வீட்டில் ரூ.29 கோடி, 15 கிலோ தங்கம் பறிமுதல்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!
வெள்ளி 31, ஜூலை 2026 5:52:38 PM (IST)

கர்நாடகாவில் பதற்றமான சூழல்: முதல்வர் விஜய் வர வேண்டாம் - டி.கே. சிவக்குமார் கோரிக்கை!
வெள்ளி 31, ஜூலை 2026 3:30:35 PM (IST)


