» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பீகார் சட்ட சபை தேர்தல்: இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:24:12 PM (IST)
பீகார் சட்ட சபை தேர்தலில் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
243 தொகுதிகளை கொண்ட பீகாரில் அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி (மெகா கூட்டணி) என 2 பிரதான கூட்டணி கட்சிகளும், பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளன. மும்முனை போட்டி வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்து வந்தது. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால், இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்தன.
இந்த நிலையில், இன்று பாட்னாவில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இந்தியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் வேட்பாளராக விஐபி கட்சியின் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியில் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார்..!
திங்கள் 26, ஜனவரி 2026 11:40:19 AM (IST)

தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு அங்கீகாரம்: மத்திய அரசின் பத்ம விருகள் அறிவிப்பு!
ஞாயிறு 25, ஜனவரி 2026 8:43:58 PM (IST)

மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள்: பிரதமர் மோடி தகவல்
ஞாயிறு 25, ஜனவரி 2026 8:13:44 PM (IST)

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள்: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 24, ஜனவரி 2026 5:43:32 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்; விமானங்கள் ரத்து
சனி 24, ஜனவரி 2026 12:04:20 PM (IST)

கர்நாடகத்தில் பைக் டாக்ஸி மீதான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 23, ஜனவரி 2026 5:07:26 PM (IST)

