» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்ய வாரிசுகளுக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 24, அக்டோபர் 2025 3:50:43 PM (IST)
பெற்றோர் விற்ற சொத்துகள் செல்லாது என வாரிசுகளுக்கு இருக்கிறது' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்காக, அவர்கள் வழக்கு தொடர வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் தெளிவுபடுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் ஷமனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ருத்ரப்பா. இவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். 1971ம் ஆண்டு, மூன்று மகன்கள் பெயரில் ருத்ரப்பா நிலங்களை வாங்கினார். அதை நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், 1983ல், நீலம்மா என்பவருக்கு விற்றுள்ளார்.மூன்று மகன்களும், 18 வயதை கடந்த நிலையில், நிலம் விற்கப்பட்டது தெரியாமல், அதை சிவப்பா என்பவருக்கு மீண்டும் விற்றுள்ளனர். இதனால், முதலில் அந்த நிலத்தை வாங்கிய நீலம்மா என்பவர் உரிமை கோரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விற்பனையை ரத்து செய்வதற்கு வாரிசுகள் வழக்கு தொடர வேண்டுமா, வேண்டாமா? என்பதில் முரண்பட்டு தீர்ப்பு அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
வழக்கை விசாரித்து நீதிபதி மித்தல் பிறப்பித்த உத்தரவு: பெற்றோர் விற்ற சொத்து களை ரத்து செய்யவோ அல்லது அதை வேறு ஒருவருக்கு விற்கவோ, 18 வயது நிரம்பிய வாரிசுகளுக்கு உரிமை இருக்கிறது. இதற்காக, அவர்கள் தனியே வழக்கு தொடர வேண்டிய அவசியம் இல்லை.
மூல விற்பனை பற்றி, மைனர்களாக இருக்கும் வாரிசுகள் அறிந்திருக்க பெரும்பாலும் வாய்ப்பு இல்லை. எனவே, பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்யும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியில் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார்..!
திங்கள் 26, ஜனவரி 2026 11:40:19 AM (IST)

தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு அங்கீகாரம்: மத்திய அரசின் பத்ம விருகள் அறிவிப்பு!
ஞாயிறு 25, ஜனவரி 2026 8:43:58 PM (IST)

மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள்: பிரதமர் மோடி தகவல்
ஞாயிறு 25, ஜனவரி 2026 8:13:44 PM (IST)

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள்: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 24, ஜனவரி 2026 5:43:32 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்; விமானங்கள் ரத்து
சனி 24, ஜனவரி 2026 12:04:20 PM (IST)

கர்நாடகத்தில் பைக் டாக்ஸி மீதான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 23, ஜனவரி 2026 5:07:26 PM (IST)

