» சினிமா » செய்திகள்

ரஜினி படத்திலிருந்து இயக்குநர் சுந்தர். சி விலகல்!

வியாழன் 13, நவம்பர் 2025 3:32:58 PM (IST)




கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்க உள்ள திரைப்படத்திலிருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர். சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

லோகேஷ் கனகராஜ், நெல்சன் என இளம் இயக்குநர்களுடன் பணியாற்றிய ரஜினி மீண்டும் மூத்த இயக்குநரான சுந்தர்.சியுடன் இணைந்தது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் கனத்த இதயத்துடன் இப்படத்திலிருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன்” என சுந்தர். சி அறிக்கை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த அறிக்கையில், "நீண்ட காலம் கழித்து நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை அவர்கள் எனக்கு வழங்கியதற்காக நன்றியைத் தெரிவிக்கிறேன். அதேநேரம், நான் சூப்பர் ஸ்டாரின் படத்தை இயக்குகிறேன் என செய்தி வெளியானபோது உற்சாகமான ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திடீர் அறிக்கை ரசிகர்களிடம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, சுந்தர். சி முக்குத்தி அம்மன் - 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory