» சினிமா » செய்திகள்
கண்ணப்பா படத்தில் வன்முறை காட்சிகள்: சென்சாரில் எதிர்ப்பு!
வியாழன் 26, ஜூன் 2025 10:39:28 AM (IST)

கண்ணப்பா திரைப்படத்தில் அளவுக்கு மீறிய வன்முறை உள்ளதால் பல காட்சிகளை நீக்க சென்சார் குழு பரிந்துரை செய்துள்ளது.
தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு நடித்துள்ள புராண படம், ‘கண்ணப்பா’. இந்திப் பட இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதில், சரத்குமார், பிரீத்திமுகுந்தன், மோகன்பாபு, மது,கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக் ஷய்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், அதிகமான வன்முறை காட்சிகளுக்கும் சில வசனங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மாற்றினால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் தர முடியும் என்றனர். இதையடுத்து மறு ஆய்வுக் குழுவுக்குப் படம் அனுப்பப்பட்டது.
அதிகமான ரத்தம், இறந்த உடல்கள், மனித உடலை அம்பு துளையிடும் காட்சிகள் உள்பட பல காட்சிகளை நீக்க, மறு ஆய்வுக் குழு அறிவுறுத்தியது. சில வசனங்களை நீக்கவும் சிலவற்றை மாற்றியமைக்கவும் உத்தரவிட்டது. பின்னர் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. வழக்கமாகப் புராண படங்களுக்கு ‘யு’ சான்றிதழ் வழங்குவதுதான் நடைமுறை. மாற்றங்களுக்குப் பிறகு படத்தின் நீளம் 3 மணி நேரம் 2 நிமிடம் 51 விநாடிகளாக உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அருணாச்சலம் படத்துக்குப் பின் இணையும் ரஜினி - சுந்தர்.சி!
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:10:49 AM (IST)

இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கு சொந்தமானது : ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:31:51 AM (IST)

ஜன நாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:35:06 PM (IST)

தென் தமிழ்நாட்டின் அரசியலை மையப்படுத்தி படம்: பைசன் குறித்து மாரி செல்வராஜ்..!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:44:24 AM (IST)

கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றை நம்பித்தான் இயக்குநர்கள் : எஸ்.ஏ.சந்திரசேகரன் வருத்தம்
சனி 11, அக்டோபர் 2025 4:11:49 PM (IST)

வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ்.டி.ஆர். நடிக்கும் அரசன்!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 4:10:03 PM (IST)
