» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்தியாவுடன் விளையாட மறுப்பு: பாக். அணி மறுபரிசீலனை செய்ய இலங்கை வலியுறுத்தல்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 11:06:16 AM (IST)
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி உடனான லீக் ஆட்டத்தை புறக்கணிக்கும் முடிவை பாகிஸ்தான் அணி மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளது இலங்கை. பிப்ரவரி 15-ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறவில்லை என்றால் நிதி இழப்பு, பொருளாதார வீழ்ச்சி உட்பட பல்வேறு இழப்புகளை இலங்கை எதிர்கொள்ளும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டு சுற்றுலா துறையில் இதன் தாக்கம் பெரிய அளவில் எதிரொலிக்கும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆட்டம் நடைபெறவில்லை என்றால் விமான டிக்கெட் முன்பதிவு, தங்கும் விடுதிகளின் முன்பதிவு ரத்தாகும். அது தங்கள் நாட்டின் சுற்றுலா துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், பிரேமதேசா கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகி உள்ளது. அதனால் ஆட்டத்தை நடத்த நாங்கள் தயார் நிலையில் உள்ளோம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த இழப்புகள் இலங்கைக்கு மட்டுமல்லாது தொடரில் பங்கேற்றுள்ள பலருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இது தொடரை வெற்றிகரமாக நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. குறிப்பாக சர்வதேச நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயங்கிய போது தங்கள் அணி பல்வேறு முறை அங்கு பயணித்து, கிரிக்கெட் விளையாடியதாக இந்த கடிதத்தில் இலங்கை குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அபிஷேக், ஸ்ரேயாஸ் அதிரடி பேட்டிங்: இங்கிலாந்து டி20 தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து!
வியாழன் 2, ஜூலை 2026 11:55:02 AM (IST)

இந்திய ஜூனியர் அணியில் கோவில்பட்டி ஹாக்கி வீரர் தேர்வு : பெல்ஜியம் தொடரில் விளையாட வாய்ப்பு!
வியாழன் 2, ஜூலை 2026 8:50:55 AM (IST)

பெனால்டி ஷூட்-அவுட்: ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே அதிரடி வெற்றி!
செவ்வாய் 30, ஜூன் 2026 12:18:39 PM (IST)

மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி - தொடரிலிருந்து வெளியேற்றம்!
திங்கள் 29, ஜூன் 2026 12:41:26 PM (IST)

ஒரு ரன்னில் அயர்லாந்திடம் தோல்வி: தொடரை இழந்தது இந்திய அணி!
திங்கள் 29, ஜூன் 2026 12:33:39 PM (IST)

டி20 உலக சாம்பியன் இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது அயர்லாந்து அணி!
சனி 27, ஜூன் 2026 5:27:38 PM (IST)


