» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்காவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி துருக்கி த்ரில் வெற்றி!
வெள்ளி 26, ஜூன் 2026 4:06:52 PM (IST)

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'டி' பிரிவு லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி துருக்கி அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 7:30 மணிக்குத் தொடங்கிய இப்போட்டியில், ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே அமெரிக்க வீரர் ஆஸ்டன் ட்ரஸ்டி முதல் கோலை அடித்துத் தனது அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.
இருப்பினும், அதிர்ச்சியில் இருந்து மீண்ட துருக்கி அணி 10-வது நிமிடத்தில் அதிரடியாகப் பதில் கோல் அடித்தது. அந்த அணியின் ஆர்தா குலர் இந்த சமனிலை கோலை அடித்தார். தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தைத் தொடுத்த துருக்கி அணியின் ஓர்குன் கோக்சு, 31-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து அணியை 2-1 என முன்னிலைக்குக் கொண்டு சென்றார். இதனால் முதல் பாதி ஆட்ட முடிவில் துருக்கி 2-1 என ஒரு கோல் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் ஆட்டத்தைத் தீவிரப்படுத்திய அமெரிக்க அணிக்கு, செபாஸ்டியன் பெர்ஹால்டர் அடித்த கோல் மூலம் ஆட்டம் 2-2 என சமநிலைக்கு வந்தது. அதன் பிறகு இரு அணிகளும் வெற்றிக்கான கோலை அடிக்கக் கடுமையாகப் போராடின.
ஆட்டம் சமனில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் இறுதி நிமிடத்தில் துருக்கி வீரர் கான் அய்ஹான் அதிரடியாக ஒரு கோல் அடித்துத் தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில், விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி துருக்கி திரில் வெற்றி பெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையை வீழ்த்தி 3-வது முறையாக கோவை கிங்ஸ் சாம்பியன்!
சனி 29, ஆகஸ்ட் 2026 8:46:51 AM (IST)

ஐசிசி தரவரிசை: பும்ராவைப் பின்னுக்குத் தள்ளி மிட்செல் ஸ்டார்க் முதலிடம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:50:56 PM (IST)

சுதர் சுழலில் சிக்கிய இலங்கை: காலே டெஸ்ட்டில் 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:42:33 PM (IST)

வெறும் ₹100-க்கு ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பை விற்பனை செய்த டாடா ஸ்டீல்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:24:48 PM (IST)

வயது முக்கியமல்ல, திறமைதான் முக்கியம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரெட் லீ பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:14:44 PM (IST)

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)


