» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய ஜூனியர் அணியில் கோவில்பட்டி ஹாக்கி வீரர் தேர்வு : பெல்ஜியம் தொடரில் விளையாட வாய்ப்பு!

வியாழன் 2, ஜூலை 2026 8:50:55 AM (IST)

பெல்ஜியத்தில் நடைபெற உள்ள சர்வதேச ஹாக்கி போட்டித் தொடருக்கான 22 பேர் கொண்ட இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த தமிழக வீரர் வி.மணிமாறன் இடம் பிடித்துள்ளார்.

இந்திய ஜூனியர் ஹாக்கி அணி வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை பெல்ஜியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த நாட்டு ஜூனியர் ஹாக்கி அணிக்கு எதிராகப் பல்வேறு போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டுள்ளது. இந்த சர்வதேசப் போட்டித் தொடருக்கான 22 வீரர்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ இந்திய அணி நிர்வாகத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக அன்மோல் எக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இளம் திறமைகளைக் கொண்ட இந்த இந்திய அணியில், தமிழகத்தின் சார்பில் வி.மணிமாறன் தேர்வு செய்யப்பட்டுப் பெருமை சேர்த்துள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) விளையாட்டு விடுதி (Sports Hostel) வீரர் ஆவார். கோவில்பட்டி ஹாக்கி மைதானத்தில் தீவிரப் பயிற்சி பெற்று வந்த மணிமாறன், தனது சிறந்த ஆட்டத்திறனால் தேசிய அணியில் இடம்பிடித்துள்ளது கோவில்பட்டி மற்றும் தமிழக ஹாக்கி வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியையும், சோகக் செய்திகளுக்கு மத்தியில் இப்பகுதிக்கு மிகச் சிறந்த பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory