» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி20 உலகக் கோப்பை 2026: அனிருத் இசையமைத்த புதிய பாடல் வெளியீடு!
சனி 31, ஜனவரி 2026 12:17:01 PM (IST)
2026 டி20 உலகக் கோப்பைக்காக அனிருத் இசையமைத்த பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஆடவருக்கான டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் பிப்.7ஆம் தேதி முதல் இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. உலகக் கோப்பைக்காக அனிருத் இசையமைத்த பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது. ”பீல் த த்ரில்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ஹைசன்பர்க் எழுதிய இந்த ஐசிசியின் புதிய பாடலுக்கு அனிருத் இசையமைத்து பாடியுள்ளார்.
இந்தப் பாடலை ஸ்பாடிபை, ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக், ஜியோ சாவ்ன், யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூலில் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு, கேட்டு ரசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச அணி இந்தியாவில் விளையாட மறுத்ததால், அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சென்னை, மும்பை, தில்லி உள்பட மொத்தம் 5 இடங்களில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இலங்கையில் மூன்று திடல்களில் இந்தப் போட்டிகள் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது கடைசி டி20யில் நியூசிலாந்தை இன்று எதிர்கொள்கிறது. உலகக் கோப்பைக்கு முன்பாக வெற்றியுடன் இந்தப் போட்டியை முடிக்க வேண்டுமென வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் இருக்கிறார்கள்.
இலங்கையில் மூன்று திடல்களில் இந்தப் போட்டிகள் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது கடைசி டி20யில் நியூசிலாந்தை இன்று எதிர்கொள்கிறது. உலகக் கோப்பைக்கு முன்பாக வெற்றியுடன் இந்தப் போட்டியை முடிக்க வேண்டுமென வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் இருக்கிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் பிரீமியர் லீக்: ஓர் இடத்துக்குப் போட்டியிடும் 3 அணிகள்!
சனி 31, ஜனவரி 2026 4:50:16 PM (IST)

டி20 உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகல்?
வெள்ளி 30, ஜனவரி 2026 11:48:33 AM (IST)

எஸ்ஏ20 கிரிக்கெட் தொடர்: சன்ரைசர்ஸ் 3வது முறையாக சாம்பியன்!
செவ்வாய் 27, ஜனவரி 2026 12:25:18 PM (IST)

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சதம்: மும்பை வீராங்கனை சாதனை!
செவ்வாய் 27, ஜனவரி 2026 12:11:15 PM (IST)

அபிஷேக் சர்மா, சூர்யகுமார் அதிரடி: நியூசி.யை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!
திங்கள் 26, ஜனவரி 2026 11:43:56 AM (IST)

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் வெற்றி: இந்திய அணி சாதனை!
சனி 24, ஜனவரி 2026 11:58:43 AM (IST)

