» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஜிதேஷ் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
புதன் 5, நவம்பர் 2025 5:30:26 PM (IST)
கத்தாரில் நடைபெற உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பைக்கான இந்திய ஏ அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை டி20 போட்டிகள் கத்தாரில் வரும் 14ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதற்கான இந்தியா ஏ அணி ஜிதேஷ் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ஏ அணியில் பிரியன்ஸ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, நேஹல் வதேரா, நமன் திர் (விக்கெட் கீப்பர்), சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஜிதேஷ் சர்மா (கேப்டன்), ரமண்தீப் சிங், ஹர்ஷ் தூபே, அசுதோஷ் சர்மா, யாஷ் தாக்குர், குர்ஜப்நீத் சிங், விஜய் குமார் வைஷாக், யுதிர் சிங் சரக், அபிஷேக் பொரெல், சுயாஷ் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தவிர, குர்னூர் சிங் பிரார், குமார் குஷாக்ரா, தனுஷ் கோடியன், சமீர் ரிஸ்வி, ஷேக் ரஷீத் ஆகியோர் ஸ்டேண்ட் பை வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்னர்.
இந்திய அணி, வரும் 16ம் தேதி நடக்கும் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதவுள்ளது. தவிர, வரும் 14ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சுடனும், 18ம் தேதி ஓமன் அணியுடனும் இந்தியா மோதுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி-20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
சனி 20, டிசம்பர் 2025 8:48:37 PM (IST)

திலக் வர்மா, பாண்டியா அதிரடி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா!
சனி 20, டிசம்பர் 2025 11:35:09 AM (IST)

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)


.gif)