» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் : பாகிஸ்தான் அறிவிப்பு
திங்கள் 2, பிப்ரவரி 2026 10:49:49 AM (IST)

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் ‘சி’ பிரிவில் வங்காளதேச அணி இடம் பிடித்து இருந்தது. அந்த அணிக்குரிய லீக் ஆட்டங்கள் கொல்கத்தா மற்றும் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவின் பேரில் அந்த அணி நிர்வாகம் விடுவித்தது. வங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்ததை தொடர்ந்து அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த வங்காளதேசம் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இந்தியாவுக்கு செல்லமாட்டோம். அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் கடைசி நேரத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்ய முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மறுத்து விட்டது. இதன் தொடர்ச்சியாக வங்காளதேச அணி 20ஓவர் உலக கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டது. மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது.
வங்கதேசத்துக்கு ஆதரவாக டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தானும் புறக்கணிப்பதாக தகவல் வெளியானது. எனினும், இது தொடர்பாக பாகிஸ்தான் முடிவை எடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டே வந்தது. இந்த நிலையில், இலங்கையில் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்தியா தவிர இதர அணிகளுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இலங்கையில் வரும் 15 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பங்கேற்க இருந்தன. தற்போது இந்த போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்து இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதால், பாகிஸ்தான் அணி இரண்டு புள்ளிகளை இழக்கும். அதாவது, இந்திய அணிக்கு விளையாடமலே இரண்டு புள்ளிகள் கிடைக்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் அதிரடி வெற்றி; ரொனால்டோ புதிய சாதனை!
புதன் 24, ஜூன் 2026 10:51:17 AM (IST)

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : கோலி உள்ளே... ஜெய்ஸ்வால் வெளியே!!
திங்கள் 22, ஜூன் 2026 11:10:22 AM (IST)

போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கோ: நடுகளத்தில் மிரட்டிய சாமுவேல் முத்துசாமி!
வெள்ளி 19, ஜூன் 2026 12:00:29 PM (IST)

உலகக் கோப்பையில் தமிழ் வம்சாவளி வீரர்: காங்கோ அணிக்காகக் களம் கண்ட சாமுவேல் முத்துசாமி!
வியாழன் 18, ஜூன் 2026 12:04:10 PM (IST)

மகளிர் டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
வியாழன் 18, ஜூன் 2026 11:31:58 AM (IST)

கில், இஷான் கிஷன் சதம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
வியாழன் 18, ஜூன் 2026 8:32:03 AM (IST)