» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அபிஷேக் சர்மா அதிரடி: பாகிஸ்தானை மீண்டும் வென்றது இந்தியா!

திங்கள் 22, செப்டம்பர் 2025 8:33:44 AM (IST)



ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் 58 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

டி20 கிரிக்கெட்டில் இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய விக்கெட்டையும் சேர்த்து ஹர்திக் பாண்ட்யா பாகிஸ்தானுக்கு எதிராக 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory